Saturday, 10 December 2016

ஜெயலலிதா vs சசிகலா

எல்லா ஊடகங்களும் அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் சசிகலா என்று விவாதிக்கின்றனர். இதற்கு அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும் ஆதரவு தெரிவிப்பதாக ஒரு தோற்றம் உருவாகியுள்ளது.

ஆனால் அதிமுகவின் உண்மை தொண்டர்கள் எண்ணம் அவ்வாறு இருப்பதாக தெரியவில்லை.

சசிகலாவால் ஒரு ஜானகி இராமச்சந்திரனாக வேண்டுமானால் ஆக முடியுமே ஒழிய ஜெயலலிதாவாக ஒருகாலும் ஆக முடியாது.

Tuesday, 6 December 2016

சோ.இராமசாமி காலமானார்.

மூப்பனார் தொடங்கி பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு இராஜகுருவாகவும், மிகச்சிறந்த அரசியல் விமர்சகராகவும் விளங்கிய துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் திரு சோ.இராமசாமி இன்று அதிகாலை மரணமடைந்தார்.

அண்ணாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Monday, 5 December 2016

அம்மா அமரரானார்

இனியொரு முறை உங்களைப் போன்ற பெண் தமிழக அரசியலில் கோலோச்ச முடியுமா என்று யாம் அறியேன்.

பல முறை உங்கள் அரசியலை குறை கூறியவர்களில் நானும் ஒருவன் தான்.

ஆனால் நான் உறுதியாக கூறுவேன் எம்ஜிஆருக்கு பிறகு தமிழகத்தை ஆட்சி செய்தவர்களில் மிகச் சிறந்த முதல்வர் என்றால் நீங்கள் தான், ஆம் நீங்கள் மட்டும் தான்.

மிகச் சிறந்த அரசியல் சாணக்கியம் நிறைந்த, இந்த தமிழகத்து ஆணாதிக்க அரசியலில் எத்தனை முறை கீழே வீசப்பட்டாலும் மீண்டும் வீறு கொண்டு எழுந்து வெற்றிக்கனியை பறித்த நீங்கள் எம் சமகாலத்தில் வாழ்ந்த ஒரு இரும்பு பெண்மணி தான்.

உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்