Showing posts with label முல்லைப்பெரியாறு. Show all posts
Showing posts with label முல்லைப்பெரியாறு. Show all posts

Sunday, 11 September 2016

ஆற்று அரசியல் - 1

ஏன் தமிழகம் தண்ணீருக்காக போராடிக் கொண்டிருக்கிறது? இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன?

முதலில் ஒரு விசயத்தை பார்த்தோமானால் இந்த பிரச்சினைக்கெல்லாம் அடிப்படை மொழிவாரி மாநில பிரிவினையின் போது தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகளே!

ஆம்! மொழிவாரி மாநில பிரிவினையின் போது நியாயமாக தமிழர்கள் அதிகமாக வாழும் பெங்களூர், மைசூர், சாம்ராஜ் நகர், மாண்டியா மற்றும் கோலார் போன்ற பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைந்திருந்தால் மற்றும் தனி மாநிலம் (அ) தமிழ்நாட்டுடன் இணைய விரும்பிய குடகு மக்களை சரியாக பயன்படுத்தியிருந்தால் #காவிரி பிரச்சினையே இன்று இருந்திருக்காது.

அதே போலத்ததான் தமிழர்கள் அதிகமாக வாழும் இடுக்கி, பீர்மேடு, தேவிகுளம், வண்டிப்பெரியாறு மற்றும் பாலக்காடு போன்ற பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைந்திருந்தால் இன்று #முல்லைப்பெரியாறு #சிறுவாணி #பவானி ஆற்றில் பிரச்சினையே இருந்திருக்காது.

அதே போலத்தான் தமிழர்கள் அதிகமாக வாழும் சித்தூர், நகரி, விஜயபுரம் மற்றும் நெல்லூர் போன்ற பகுதிகள் தமிழ் நாட்டுடன் இணைந்திருந்தால் இன்று நமக்கு #பாலாறு பிரச்சினையோ இல்லை #செம்மரம் கடத்தலில் அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்படுவதோ இருந்திருக்காது.

ஏன் நாம் அன்று இதை கண்டுகொள்ளவில்லை என்று ஆராய்ந்தால் அன்று நமது அரசியல் கட்சிகள் அனைத்தும் தேசிய உணர்வையோ அல்லது திராவிட உணர்வையோ தான் மையமாக கொண்டு செயல்பட்டன.

மேடாவது குளமாவது எல்லாம் இந்தியாவில் தானே உள்ளது என்று காமராசரும் மொழிவாரி பிரிந்து திராவிடமாக இணைந்து தனி சோசலிச திராவிட குடியரசை அமைக்கும் நோக்கில் அண்ணாவும் இருந்ததால் இப்பிரச்சினைக்கு யாரும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

சரி தற்போதைய கள நிலவரத்துக்கு வருவோம். கர்நாடகாவில் போராட்டம் தீவிரமாக நடைபெறுகிறது, ஆனால் போராடுபவர்கள் அனைவரும் கன்னட வெறியாளர்களே தவிர விவசாயிகள் அல்ல.

சரி நம் ஊர் அரசியலை பார்ப்போம். எத்தனை காலம் ஆனாலும் இந்த திராவிட அரசியல்வாதிகள் உள்ளவரை காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வராது. இவ்விசயத்தில் நாம் கலைவர் மற்றும் அம்மாவை ஒப்பிடுவோமானால் கலைஞர் சற்று நீக்கு போக்காக செயல்பட்டு பிரச்சினை வராமல் ஓரளவு நீரை பெற்று விடுவார். ஆனால் அம்மா ஆட்சியில் அதற்கு வாய்ப்பேயில்லை.

இன்று சமூக வலைதளங்களில் தமிழர்களை அதிகமாக கன்னடர்கள் அதிகமாக ஏளனப்படுத்துவதற்கு யார் காரணம் என்றால் முழுக்க முழுக்க அதிமுக தான். அன்று அம்மா கன்னட சிறையில் இருந்த போது அம்மா அடிமைகள் செய்த வேலைதான் காரணம். ஆம்! எங்களுக்கு காவிரி வேண்டாம், அம்மாவை கொடுத்தால் போதும் என்று அடித்த கூத்துதான் காரணம். ஏனய்யா அதிமுக காரர்களே அன்று காவிரி வேண்டாம் என்று சொல்லிவிட்டு இப்பொழுது காவிரிக்காக எதற்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடத்துகிறீர்கள்?

- ஆற்று அரசியல் தொடரும்!